ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் மஷ்ரூம் சீஸ் பாஸ்தா செய்ய ரெசிபி.!

Share

பாஸ்தா என்றாலே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பாஸ்தாவை பொருத்த வரையில் டயட் இருப்பவர்களுக்கும் சரி டயட் இல்லாதவர்களுக்கும் சரி, ஒரு வெர்சடையில் ஆப்ஷன் என்றே சொல்லலாம். நீங்கள் டயட் இருப்பவராக இருந்தால் பாஸ்தாவை வேகவைத்து காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடலாம். நான் டயட்டெல்லாம் இல்லை என்பவராக இருந்தால் நன்றாக சீஸ் கொண்ட சாஸில் செய்து ஒரு ரிச்சான உணவாக ருசித்து சாப்பிடலாம்.

அப்படி இருக்கையில் என்னதான் பாஸ்தாவில் பல வெரைட்டிகள் இருந்தாலும் நன்றாக கிரீமீ மற்றிம் சீஸி பாஸ்தாவிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று கூட சொல்லலாம். அப்படி விரும்புவோருக்கு தான் இந்த ரெசிபி. இந்த பதிவில் கிரீமியான மஷ்ரூம் சீஸ் பாஸ்தாவை எப்படி செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • மஷ்ரூம்-1 பாக்கெட்
  • பாஸ்தா – 2 கப்
  • சுக்கினி-1
  • பூண்டு – 2 பல்
  • மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
  • ஒரேகனோ – சிறிதளவு
  • பார்ஸ்லே – சிறிதளவு
  • ஆலிவ் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு,

  • பால் – 1/4 கப்
  • வெண்ணை – 1/4 கப்
  • கிரீம் – 1/4 கப்
  • பார்மிசான் சீஸ் – 3 டீஸ்பூன்

செய்முறை:

பாஸ்தாவை வேக வைத்து எடுத்து வடிக்கட்டிக்கொள்ளவும். பாஸ்தாவை காற்றாற வைக்கவும். ஒன்றோடொன்னு ஒட்டாமல் வரவேண்டும்.

வேறு ஒரு பாத்திரத்தில் வெண்ணை போட்டு உருகியதும் கிரீம் சேர்த்து பாலை கொஞ்சம் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சீஸ் சேர்த்து கிளறிக் கொண்டே கொஞ்சம் பால் சேர்க்கவும்.

பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 8 நிமிடம் கிளற வேண்டும்.

பெரிய வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொரிய விடவும்.பச்சை வாசம் நீங்கியவுடன் நீளமாக நறுக்கிய காளான் மற்றும் துண்டங்களாக நறுக்கிய சுக்கினி சேர்த்து வதக்கவும்.

காளானில் உள்ள தண்ணீர் வற்றியவுடன் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறவும்.

2 நிமிடம் கிளறி சாஸை ஊற்றி 2 நிமிடம் மேலும் கிளறி மிளகு தூள் ஒரேகனோ மற்றும் பார்ஸ்லே சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கினால் சுவையான பாஸ்தா ரெடி.

First published:

Tags: Mushroom, Mushroom recipes, Pasta

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com