ரெட் வெல்வெட் கேக் | Red velvet cake

Share

தேவையானவை :

கேக் மோல்ட் – 2 (இதய வடிவில்),
வெண்ணெய் (உப்பில்லாதது) – 120 கிராம்,
மைதா – 300 கிராம்,
சர்க்கரை – 300 கிராம் (பொடித்தது),
உப்பு – சிட்டிகை,
கோகோ பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்,
பால் – 240 மி.லி,
முட்டை – 2 பெரியது,
சிகப்பு புட் கலர் – 1 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.

அலங்கரிக்க :

கிரீம் சீஸ் – 300 கிராம்,
விப்பிங் கிரீம் – 200 கிராம்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்துகொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் பால், எசென்ஸ், வினிகர் மற்றும் சிகப்பு புட் கலர் கலந்து வைக்கவும். வெண்ணெய் கலவையில், மைதா மற்றும் பால் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஸ்பாடுலா கொண்டு கலக்கவும். கேக் கலவையை இரண்டாக பிரித்து வேக வைத்து 150 டிகிரியில் 20-25 நிமிடம் ஓவனில் வேகவைக்கவும். ஒரு பாத்திரத்தில் விப்பிங் கிரீமை அடித்து, அதில் பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ், கிரீம், சீஸ், சேர்த்து நன்கு அடித்து இரண்டு கேக்கின் நடுவே தடவி, பின் கேக்கின் மேற்புறத்திலும் தடவி அலங்கரிக்கலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com