நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னைச் சிறந்த பேட்ஸ்மேனாக நிலை நிறுத்தியுள்ளார் இந்தியாவின் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டி போல அதிரடியாக விளையாடும் பண்டின் பேட்டிங் ஸ்டைல் கிரிக்கெட் வட்டாரத்தில் எப்போதும் பேச்சுபொருளாக இருக்கும்.
இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ்.
மைதானத்தில் பிரிட்டிஷ் ரசிகர்களையும் கூட உற்சாகப்படுத்தும் பண்டின் அச்சமற்ற அணுகுமுறைதான் அவரது வெற்றிக்கு வழிவகுக்கிறது என்பதையும் ஏபிடி ஒப்புக்கொண்டுள்ளார்.
“பண்ட் அதீத ரிஸ்க் எடுத்து விளையாடுகிறார். இது சில நேரங்களில் உங்களை மிகவும் எரிச்சலடையச் செய்யும். இரண்டு இன்னிங்ஸிலும் அவர் 30 ரன்களுக்கு உள்ளாகவே அவுட் ஆகியிருக்கக் கூடிய 20 இடங்களை என்னால் கணிக்க முடிந்தது. ஆனால் அவர் அவுட் ஆகவில்லை, அதுதான் முக்கியம்!