ராம சுப்பம்மா: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண் – யார் இவர்?

Share

காணொளிக் குறிப்பு,

காணொளி: 80 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் பெண்

சுமார் 80 வயதில் ஓட்டப்பந்தயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம சுப்பம்மா.

இவர் சிறு வயது முதலே விளையாட்டுகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இடையே இடைவெளி ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது மீண்டும் களம் கண்டு, தன்னைவிட மிகவும் இளையவர்களுடன் போட்டியிட்டு வருகிறார்.

சிறு வயதிலேயே திருமணம் முடிந்து, குழந்தைகளும் பிறந்துவிட்டதால் ராம சுப்பம்மா விளையாட்டில் இருந்து விலகிவிட்டார். தனது மகன் மற்றும் மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் கடுமையாக உழைத்தார்.

அவர்கள் இருவரும் தற்போது அரசு ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர் தனது மருமகனையும் படிக்க வைத்து, அரசு வேலை கிடைக்க உதவியுள்ளார். காவலியில் உள்ள தனது மகனுக்கும், நெல்லூரில் உள்ள மகளுக்கும் சமையல் வேலைகளில் உதவுவதற்காக, ராம சுப்பம்மா காவலிக்கும் நெல்லூருக்கும் இடையே தொடர்ந்து பயணம் செய்து வந்தார்.

அவ்வாறு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு ‘முன்னாள் தடகள வீரர்கள் சங்கத்துடனான’ தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் உதவி மற்றும் ஊக்கத்தின் மூலம், அவர் 2015இல் மீண்டும் ஓடத் தொடங்கினார்.

விரிவாக காணொளியில்…

பிபிசி தமிழுடன் பகிருங்கள்

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com