ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைதண்டனை அனுபவித்துவந்த எழுவரில், பேரறிவாளனைக் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அதைத்தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசின் தீர்மானத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதையடுத்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, நளினி உட்பட மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யலாம் என்று நவம்பர் 11-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நளினி, முருகன் ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சாந்தன் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.