ராஜஸ்தான்: வாலிபர் வயிற்றில் 56 லேசர் பிளேடுகள்… அறுவை சிகிச்சையில் அகற்றம்! | doctors removed 56 blades from youth’s stomach

Share

ராஜஸ்தானில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்பால் சிங், வயது 26. இவர், தன் தோழர்களுடன் அறையில் இருந்தபோது வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ரத்த வாந்தியும் எடுத்துள்ளார். இதைப் பார்த்துப் பதறிப்போன நண்பர்கள், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்று அனுமதித்தனர்.

Treatment (Representational Image)

Treatment (Representational Image)
Image by Parentingupstream from Pixabay

மருத்துவமனையில் யஷ்பால் சிங்கிற்கு முதலில் சோனோகிராஃபி செய்யப்பட்டது. அடுத்ததாக எண்டோஸ்கோப்பி சிகிச்சை செய்தனர். அப்போது அவரது வயிற்றில் பிளேடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com