ராஜஸ்தானில் 3 நாள் நடக்கிறது காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடக்கம்

Share

புதுடெல்லி: பல்வேறு மாநில தேர்தல் தோல்விகள், இந்தாண்டு இறுதியில் நடக்கும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் உட்பட பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும்  2024 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் தொடர் ஆலோசனையில் நடத்தி, கட்சியை பலப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கட்சியின் அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு என்ற  3 நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதிலும் இருந்து  430 காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.  இன்று பிற்பகல் 2 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துவக்க உரையாற்றுகிறார்.  மாநாட்டின் இறுதி நாளன்று ராகுல் காந்தி நிறைவு உரையாற்றுகிறார். 2024-ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்காக கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாநாட்டில் வியூகம் வகுக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலவரம், கொரோனா, வேளாண் பிரச்னைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு,  ஒன்றிய-மாநில அரசு உறவுகள்,  மத அடிப்படையில் மக்களை பிரிக்க நடக்கும் முயற்சி உள்ளிட்டவை பல பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com