டி20 உலககோப்பையில் இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. அடிலெய்ட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார்.
இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலக்ஸ் ஹேல்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பட்லர் 80 மற்றும் அலக்ஸ் 86 ரன்கள் குவித்தனர்.
இந்திய அணி தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் தோல்விக்கான காரணத்தை கேட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசமான தோல்வியால் அணியில் மாற்றங்களை கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் இந்திய அணியில் 37 வயதில் விளையாடும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் மூத்த வீரராகவும், ரோகித் சர்மா (35), விராட் கோலி (33), அஷ்வின் (36), சூர்யகுமார் யாதவ் (32), புவனேஷ்வர் குமார் (32) உள்ளிட்டோர் 30 வயதுக்கு மேல் இருப்பதால் அவர்களின் டி20 போட்டி எதிர்காலம் குறித்தும் தற்போது பிசிசிஐ தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த டி20 உலககோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் வகையில் புதிய அணி மற்றும் புதிய கேப்டனை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.