சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ‘‘செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரியில் ராகிங் கொடுமை தாங்க முடியாத கவிப்பிரியா கடந்த 28-ஆம் தேதி வியாழக்கிழமை தமது தந்தையை தொடர்பு கொண்டு, தமக்கு இழைக்கப்படும் கொடுமை குறித்து கூறியதுடன், விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்து விடுவதாக கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கவிப்பிரியா அவர் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. மேலும் மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில், 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.
ராகிங்கால் தற்கொலை மாணவி குடும்பத்துக்கு ரூ.1 ேகாடி இழப்பீடு: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
Share