ரயில் விபத்து: சரக்கு ரயில் பயணிகள் ரயில் மோதல் – தடம் புரண்ட பெட்டிகள்|Train accident near tiruvallur

Share

மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூர் தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் விபத்துரயில் விபத்து

ரயில் விபத்து

இந்த விபத்து நடந்த பகுதிக்கு மீட்புப் பணியினர் விரைந்து வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. பயணிகள் விரைவு ரயிலின் மேலும் சில பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தகவல்

12578 என்ற எண் கொண்ட மைசூரு – தர்பங்கா எக்ஸ்பிரஸ் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிடம் தாமதமாக இன்று காலை 10:30 மணிக்கு கிளம்பியிருக்கிறது. பெங்களூர், காட்பாடி, விஜயவாடா, குண்டூர், பிரயாக்ராஜ், பாட்னா ஆகிய பகுதிகளை கடந்து மூன்றாவது நாளில் இந்த ரயில் பீகாரின் தர்பங்காவை எட்டும். மைசூரில் இன்று காலை கிளம்பிய இந்த ரயில் இரவு 7:39 மணிக்கு தமிழகத்தின் பெரம்பூர் ரயில் நிலையத்தை எட்டியிருக்கிறது. அங்கிருந்து 7:44 மணிக்கு கிளம்பி குண்டூரை நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறது. கிட்டத்தட்ட இரவு 10:15 மணிக்கு இந்த ரயில் குண்டூரை அடைந்திருக்க வேண்டும். ஆனால், பெரம்பூருக்கும் குண்டூருக்கும் இடையில் கவரப்பேட்டை என்கிற இடத்தை ரயில் கடக்கையில் சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. பயணிகள் ரயில் இரண்டு பெட்டிகளில் தீப்பற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

M

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com