ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு?! – விசாரணைக்கு தயாராகும் என்.ஐ.ஏ | Train fire incident, is saifi has terror link?

Share

ஷாரூக் ஷைப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு இல்லை என கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஷாரூக் ஷைபி-யின் பயங்கரவாத தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.

ஷாரூக் ஷைப்பிடம் விசாரணை

ஷாரூக் ஷைப்பிடம் விசாரணை

தாக்குதலுக்கு கேரளா மாநிலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேவிக்கு விடைதேடுகிறது போலீஸ். எலத்தூர் பகுதியில் ஹிந்துஸ்தான் பெட்ரோலின் டெப்போ ஒன்று உள்ளது. அதன்மூலம் பெரும் விபத்து எற்படுத்த திட்டமிடப்பட்டதா, பாலத்தின் மீது ரயில் செல்லும் சமயத்தில் தீ வைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலும் பெரிய சதித்திட்டம் உள்ளதா எனவும் விசாரிக்க என்.ஐ.ஏ தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஷாரூக் மீது யு.ஏ.பி வழக்கு பாய்ந்தால், இந்த வழக்கை என்.ஐ.ஏ கையில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com