யுக்ரேன் – ரஷ்யா போர்க்கள நிலவரம்: 15 சமீபத்திய தகவல்கள்

Share

ukraine russia war bbc tamil

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று தெரிவித்தார்.

யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில் சனிக்கிழமை நடந்த முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

1. சனியன்று வடக்கு யுக்ரேனில் ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள சுமி எனும் நகரத்தில் ரஷ்யா தாக்குதல் மூலம் ஏவிய ஏவுகணைகள் இரண்டு இடங்களைத் தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ரஷ்ய எல்லையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வடகிழக்கு யுக்ரேன் நகரின் மக்கள் தொகை சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

2. யுக்ரேனின் கார்ஹிவ், ஒடெஸ்ஸா மற்றும் போல்டோவா ஆகிய நகரங்களின் உள்ளூர் அதிகாரிகளும் ரஷ்ய ஏவுகணை தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாகத் தெரிவித்துள்ளனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com