`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். கடந்த அத்தியாயத்தில், தாய்ப்பால் வங்கி மற்றும் தாய்ப்பால் தானம் குறித்து கண்டோம். இந்த அத்தியாயத்தில், தாய்ப்பால் வங்கியில் தாய்ப்பால் எவ்வாறு சேகரிக்கப்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கப் படுகிறது என்பதை விரிவாகக் காண்போம்.