யாருக்குமே உண்மையாக இல்லை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

Share

கோவை: ‘யாருக்குமே உண்மையாக இல்லாத அதிமுகவை மக்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உயர்நீதிமன்ற உத்தரவின் படி அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய செங்கல்சூளைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.  செங்கல் உற்பத்தி பாதிக்காத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வருவாய் துறை ஆவணங்களை சமர்ப்பித்து மின் இணைப்பு கேட்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கோடை காலங்களில் மின்சாரம் தொடர்பாக எந்த பாதிப்பும் ஏற்படாது.

சோலார் மின் உற்பத்திக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஆதார் கார்டு உடன் மின் இணைப்பு இணைக்கும் விவகாரத்தில் ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தாலும் கூட அவர்கள் அனைவரது ஆதாரையும் இணைக்கலாம். 99.7 விழுக்காடு புள்ளி இணைக்கப்பட்டுள்ளது. 0.3 சதவீதம் பாக்கியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி என்ற மக்களின் தீர்ப்பு என்பது முதல்வர் வழங்கிக் கொண்டிருக்கும் மகத்தான சாதனைகளை அங்கீகரிக்கக்கூடிய வகையில், மேலும் ஒரு மணி மகுடமாக பார்க்கப்படுகிறது. சிலிண்டர் விலை ஏறி உள்ளது. ஒரு கருத்துக்களை கூட அதிமுக முன் வைக்கவில்லை. டெல்லியில் யார் போட்டி போட்டு அடிமையாக இருப்பது என்பதுதான் அவர்களுடைய தேவை. ஒன்று மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும், இல்லை பதவி கொடுத்தவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். யாருக்குமே உண்மையாக இல்லாத அதிமுகவை மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com