மோதி குறித்த பிபிசி ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட மறுப்பு: செல்போன், லேப்டாப்பில் பார்த்த மாணவர்கள்

Share

பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ ஆவணப்படம்

இந்திய பிரதமர் மோதி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை புதுவை பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் அவர்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். பாதுகாப்பு கருதி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. பி.பி.சி.யின் ‘இண்டியா: தி மோதி க்வெஸ்டின்’ (India: The Modi question) ஆவண படம் பல்கலைக்கழக வளாகங்களில் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.

இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பொதுவெளியில் திரையிடக்கூடாது என தெரிவித்திருந்த நிலையில் விடுதி அறைகளில் திரையிடப்படும் என அறிவித்தனர்.  அதற்கும் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்க முடியாது என அறிவித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது தொலைபேசி மற்றும் லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்யப்பட்ட  பிபிசி ஆவணப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே கூடி பார்த்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com