மோடி பிரதமர் ஆன பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடக்கவில்லை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

Share

தென்தாமரைகுளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். தென்தாமரைக்குளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி: ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான, குடிநீரை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு சன்மான நிதி வழங்கியுள்ளோம். 2014க்கு முன் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருந்தது. அதன்பிறகு அது போன்ற சம்பவமே நிகழ்வதில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் மீனவர் படுகொலை நடைபெற்றது. 600 க்கு மேற்பட்ட துப்பாக்கிச்சூடு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்கவில்லை. தமிழக மீனவர்களுக்கு  பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் அனைத்து மாநிலங்களும் மின் மிகை மாநிலமாக மாறி உள்ளன என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com