மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு | brian lara slam west indies players over test cricket performance

Share

டிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது.

இந்நிலையில், தற்போதுள்ள மேற்கு இந்தியத் தீவு கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா வைத்துள்ளார்.

இதுகுறித்து பிரையன் லாரா கூறியதாவது: எங்கள் காலத்தில் நாங்கள் முதல் தர கிரிக்கெட்டை விளையாடினோம். தற்போது டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை பெறும் படிக்கல்லாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியை பயன்படுத்துகின்றனர். இது வீரர்களின் தவறு கிடையாது.

பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் வீரர்கள் விளையாடலாம். அதில் தவறு ஏதும் இல்லை. அதேநேரத்தில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் அதற்கு தகுந்தவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com