குரூப் சி பிரிவில் அர்ஜெண்டினா மெக்சிகோ அணிகள் நேற்று மோதினர். சவுதி அரேபியாவிடம் 2-1 என்று அர்ஜெண்டினா எதிர்பாராத விதமாகத் தோற்று இருந்தது.
இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் களமிறங்கிய அர்ஜெண்டினா மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் வென்றது. மெஸ்ஸியின் அற்புதமான முதல் கோல், ஃபெர்னான்டெஸின் இரண்டாவது கோல் ஆகியவற்றின் மூலம் அர்ஜெண்டினா அணியை இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற வைத்தது. முதல் பாதியில்
அர்ஜெண்டினா அணி தரப்பில் பெரிதாக அட்டாக் செய்யப்படவில்லை. முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் மட்டுமே இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தை ஆடியது. ஆனால் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
Cometh the ⌛ Cometh the
▶ Relive Messi's heroics against #ElTri that kept @Argentina in the #FIFAWorldCup
Keep watching the #WorldsGreatestShow, only on #JioCinema & @Sports18 #Qatar2022 #FIFAWConJioCinema #FIFAWConSports18 pic.twitter.com/KQHjSrSDTY
— JioCinema (@JioCinema) November 27, 2022
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அர்ஜெண்டினா அணி அட்டாக் மேல் அட்டாக் செய்தது. அர்ஜெண்டினா அணியின் வீரர்கள் வலது பக்கம், இடது பக்கம் என மாறி மாறி தொடர்ந்து அட்டாக் செய்தனர். இதன் பலனாக அர்ஜெண்டினா அணியின் டீ மரியா சரியாக கணித்து மெஸ்ஸிக்கு கடத்திய பாஸை, மெஸ்ஸி தனது ஸ்டைலில் முதல் கோல் அடித்து அசத்தினார். இதன்பின்னர் மைதானமே ஒட்டுமொத்தமாக மெஸ்ஸி, மெஸ்ஸி என்று ஆர்ப்பரித்தது.
இதனைத் தொடர்ந்து மெக்சிகோ அணி வேறு வழியின்றி அட்டாக் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் அர்ஜென்டினா அணி வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை அர்ஜெண்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து எதிர்பாராத நேரத்தில் ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஷார்ட் கார்னரில் இருந்து ஃபெர்னான்டெஸ் அர்ஜென்டினா அணிக்காக இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாம் பாதியில் 6 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் கோல்கள் எதுவும் அடிக்கப்படாத நிலையில், அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முதல் பாதியில் மெஸ்ஸி ஆக்ரோஷம் இல்லாமல் காமன் அண்ட் கூலாக ஆடிக் கொண்டிருந்தார். முதல் பாதியில் இரண்டு ஃப்ரீ கிக் அடித்தார். இரண்டுமே கோலாக மாறவில்லை. இரண்டாவது பாதியில் வேகத்தோடு களமிறங்கி 64 ஆவது நிமிடத்தில் அருமையான பாஸ் மூலம் 25 யர்ட்ஸ் இருந்து மெஸ்ஸி அசத்தலான கோல் அடித்தார். அந்த ஒரு கோல் அர்ஜெண்டினா அணியை இன்னும் உலகக்கோப்பையில் காப்பாற்றியது என்று சொல்லலாம். கால்பந்து உலகின் ஜாம்பவான் மரடோனாவின் உலகக்கோப்பை கோல்களை மெஸ்ஸி சமம் செய்தார். இருவரும் உலகக் கோப்பையில் எட்டு கோல்கள் அடித்துள்ளனர். சஷ்டியூட் வீரராக களம் இறங்கிய ஃபெர்னான்டெஸ்க்கு மெஸ்ஸி கொடுத்த அற்புதமான அசிஸ்ட் மூலம் அர்ஜெண்டினா இரண்டாவது கோல் அடித்தது. ஆட்டம் முழுவதும் மெஸ்ஸி சிறப்பாக விளையாண்டார்.
நட்சத்திர வீரர் டீமரியா தொடக்கம் முதலே தனது அதிரடியான பெர்ஃபார்மன்ஸை கொடுத்தார். அதிக பாஸ்கலை நிகழ்த்தினார். அர்ஜென்டினாவின் முதல் கோல் அடிப்பதற்கு டி மரியாவின் அசத்தலான அசிஸ்ட் மிகப்பெரிய காரணமாக இருந்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டீ மரியாவை இரண்டாவது பாதியில் சஷ்டியுட் செய்தது ரசிகர்களுக்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.
மெஸ்ஸியின் அதிரடியான ஃபார்ம், அர்ஜெண்டினாவின் கம்பக் என சூப்பர் 16 சுற்றில் அர்ஜெண்டினா செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் சி பிரிவில் போலந்து மற்றும் அர்ஜெண்டினா முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். எல்லா அணிகளுக்கும் வரும் போட்டிகள் டு ஆர் டை ஆட்டமாக இருக்கிறது. அடுத்த போட்டியில் அர்ஜெண்டினா போலந்து அணியை எதிர்கொள்கிறது. சவுதி அரேபியா மெக்ஸிகோ அணிகள் மோதவுள்ளனர். அர்ஜெண்டினா வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடும்.