ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.
டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேமியன் மார்ட்டின் வீட்டில் ஓய்வில் இருந்தார். டிசம்பர் 26 அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவர்களால் அவர் கோமா நிலையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.
இது தொடர்பாகப் பேசிய டேமியன் மார்ட்டினின் நெருங்கிய நண்பரான முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட், “மார்ட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.