முலாயம் சிங் யாதவ் காலமானார் – பல அரசுகளை உருவாக்கி, ஆட்டிவைத்த அரசியல் தலைவர்

Share

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி செய்தியாளர்

முலாயம் சிங்

பட மூலாதாரம், Getty Images

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.

உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.

1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் இந்தர் குமார் குஜ்ரால் ஆகியோர் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார்.

”என் மதிப்புக்குரிய தந்தையும், அனைவரின் தலைவரும் இறந்துவிட்டார்,” என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாக அக்கட்சியின் அலுவல்பூர்வ டிவிட்டர் பக்கம் தெரிவிக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com