மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா…

Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், ரோஹித் சர்மா தற்போது இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தபோது மும்பை அணிக்காக 5 ஆயிரம் ரன்களை ரோஹித் சர்மா கடந்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 13 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.

மும்பை அணிக்காக ரோஹித் சர்மா மொத்தம் 189 போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரி 30.23 ரன்கள். மும்பை அணிக்காக ஒரு சதம் மற்றும் 33 அரை சதங்களை ரோஹித் சர்மா அடித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் முதல் 3 சீசன்களில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா விளையாடியிருந்தார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5,901 ரன்களை எடுத்துள்ளார் ரோஹித். மும்பை அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக கிரோன் பொலார்டு 3,915 ரன்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com