மும்பை அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.

Share

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்டர்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவைன் விளையாடினர். டெவைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க அடுத்து இணைந்த மந்தனா – எலிஸ் பெர்ரி இணை ரன் சேர்க்க தொடங்கியது. 24 ரன்கள் எடுத்திருந்தபோது மந்தனா ஆட்டமிழந்து வெளியேறினார். எலிஸ் பெர்ரி 26, ஹீதர் நைட் 12, கனிகா அகுஜா 12, ரிச்சா கோஷ் 29 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணி தரப்பில் அமேலியா கெர் 3 விக்கெட்டுகளையும், நேட் சீவர் ப்ரூன்ட், இஸி வோங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீராங்கனைகள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com