முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

Share

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு போர்ட்ஆஃப் ஸ்பெயினில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.

சீனியர் வீரர்களான மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி உள்ளிட்டோருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்தத் தொடர் சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com