முதல்வர் ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி

Share

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆறுக்குட்டி. கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவில் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் தலைமை தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதை தொடர்ந்து கட்சி நடவடிக்கையில் இருந்து அவர் சற்று விலகியே இருந்து வந்தார்.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே அதிமுக தலைமைக்கு தேவையில்லை என்று அண்மையில் அவர் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஆறுக்குட்டி தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் ஆறுக்குட்டி இணைத்துகொண்டார்.

இதையும் படிங்க: பணம் படைத்தவருக்கே பாஜகவில் பதவி… திமுகவில் இணைந்த பாஜக முன்னாள் பெண் நிர்வாகி குற்றச்சாட்டு

பாஜக  மகளிரணி முன்னாள் மாநில செயலாளராக இருந்த மைதிலி வினோ நேற்று திமுகவில் தன்னை இணைத்துகொண்ட நிலையில், தற்போது மற்றொரு முக்கிய புள்ளியான ஆறுக்குட்டியும் திமுகவில் இணைந்துள்ளது கொங்கு மண்டலத்தில் அக்கட்சிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com