தற்போதும் லட்சக்கணக்கான மக்கள் கோவிட்டால் பாதிக்கப்பட்டு போராடிக்கொண்டிருகிறார்கள். உடல் மற்றும் பொருளாதார ரீதியில் தொற்றுக்குப் பிறகான பாதிப்பிலும் மக்கள் இன்னும் சிரமத்தை சந்தித்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பின் முக்கிய நோக்கம், இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட தேவையில்லை என்பதை தெரிவிப்பதற்காக மட்டுமே. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம்.
தேவைப்பட்டால் மீண்டும் கொரோனா அவசரக்குழு கூட்டத்தை கூட்ட தயங்க மாட்டோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பொருந்தொற்றை மிகுந்த கவனத்துடத்துடன் கண்காணித்து வந்தது இந்த அவசரநிலை குழு. அந்த குழுவின் ஆலோசனைப்படியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ஆனால் எந்த ஒரு நாடும் கோவிட் தொடர்பாக தாங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள தேவையில்லை” என கூறியுள்ளார்.