முசேலி : காலை உணவாக இதை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Share

ஓட்ஸ் வகையைச் சேர்ந்த மற்றொரு ஆரோக்கியமான காலை உணவு முசேலி, இதில் பைபர் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எடையை குறைக்க விரும்புவோருக்கு சிறப்பான தேர்வாகும். பொதுவாக முசேலி என்பது ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த ஆனால் சுவையில்லாத உணவாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இதில் வைட்டமின் ஈ, தியாமின், வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12, அத்துடன் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஆனால் ஓட்ஸைப் போலவே முசேலியையும் நீங்கள் பலவகைகளில் சமைத்து சாப்பிட முடியும், இதற்கான ஏராளமான சமையல் குறிப்புகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஓட்ஸ், உலர் பழங்கள், கோதுமை, சோளம், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளதால், முசேலி உங்கள் நாளுக்கு ஒரு சரியான தொடக்கமாகும், இது அதிக அளவு புரதத்துடன் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற உதவுகிறது.

இதை இன்னும் சுவையாக மாற்ற, நீங்கள் பாதாம் பால், சாக்லேட், தேன் மற்றும் உங்களுக்கு விருப்பமான பழங்களை முசேலியில் சேர்க்கலாம். சரி, முசேலியை காலை உணவாக எடுத்துக்கொள்வதால் அப்படி என்னென்ன பலன்கள் கிடைத்துவிடக்கூடும் என நினைத்தால் அதற்கான முழு விளக்கத்தையும் கீழே கொடுத்துள்ளோம்.

1. அதிக நார்ச்சத்து:

முழு தானியமும், நார்ச்சத்தும் எப்போதும் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது, இந்த இரண்டும் முசேலியில் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் செய்கிறது.

2. நீண்ட நேரம் நிறைவாக வைக்கும்:

முசேலி முழு தானிய கலவையின் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருப்பதால், அவற்றை காலை உணவு அல்லது சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் மிகவும் நிறைவாக உணர்வீர்கள். மேலும் காலை உணவாக முசேலி சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியத்தை உங்களுக்கு ஏற்படுத்தாது, இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ | இந்த 10 மசாலா பொருட்களை தினமும் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

3. கொலஸ்ட்ராலை குறைக்கும்:

முசேலியில் அதிக அளவு பீட்டா-குளுக்கன் உள்ளது, இந்த குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (எல்டிஎல்) கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

4. சிங்கிள் பவுலுக்குள் செறிவான சத்துக்கள்:

முசேலியில் ஓட்ஸ், சியா சீட்ஸ் விதைகள், கொட்டைகள், தானியங்கள் பால் மற்றும் பழங்கள் இருப்பதால், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான காலை உணவாகும். இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கார்போஹைட்ரேட் என மனிதனை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஓட வைக்கத் தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்கின்றன.

5. அன்லிமிடேட் அயர்ன் சத்து:

மனிதனின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் இரும்புச்சத்து தலையாய ஒன்று. இந்த முக்கியமான சத்து முசேலியில் அதிக அளவில் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சோர்வைத் தடுக்கவும், ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com