முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் – பல மாநிலங்களில் வன்முறை

Share

கொல்கத்தாவில் போராட்டம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

கொல்கத்தாவில் போராட்டம்

முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது.

டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.கடந்த மாதம் நூபுர் ஷர்மா தனியார் ஆங்கில தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.

நூபுர் ஷர்மா பேசும்போது, ​​இந்த முழு சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது என்று குறிப்பிட்டு சில கருத்துக்களை வெளியிட்டார். அப்போது முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை அவர் தெரிவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதேபோல, டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டாலும் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக ட்வீட் செய்த செயல்பாடு சர்ச்சையை தோற்றுவித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com