இவரது நிலைமை மேலும் மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் அவரின் உயிரைக் காப்பாற்ற கை மற்றும் கால் கால்களை அகற்றினர்.
இது குறித்து லாராவின் தோழி ஆன்னா மெஸ்ஸினா கூறுகையில், “மீன் சாப்பிட்ட சில நாள்களிலேயே லாரா பஜாரஸின் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற, கோமா நிலைக்குத் தள்ளினார்கள்.
அவரின் விரல்கள், பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பாக மாறின. லாரா பஜாரஸ் முழுமையாக பாதிக்கப்பட்டார். அதோடு அவரின் சிறுநீரகங்களும் செயலிழந்தன . அவர் கிட்டத்தட்ட தனது உயிரை இழந்துவிட்டார். செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
“இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கடல் உயிரினத்தைச் சாப்பிடும்போது நீங்கள் பாதிக்கப்படலாம். ஏதோ ஒரு வெட்டு அல்லது டாட்டூவுக்கு பின்னர், பாக்டீரியம் இருக்கும் நீரில் கைகளை வைத்திருந்தால் பாதிக்கப்படலாம் எனத் தொற்றுநோய் நிபுணர் நடாஷா ஸ்போட்டிஸ்வூட் கூறியுள்ளார்.