மீன் அசைவமா, சைவமா என சூடு பறக்கும் விவாதம்… மருத்துவர் சொல்வதென்ன? | The heated debate whether fish is non-vegetarian or vegetarian.

Share

உணவில் மீனை சேர்த்துக் கொள்வதால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் மீன், கண்களுக்கு நல்லது. உடல் எடையை சீராக வைத்திருக்க, வாரத்திற்கு மூன்று நாள்கள் மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். நீரிழிவு நோயளிகள் மீனை எண்ணெயில் பொறிக்காமல் குழம்பு மாதிரி எடுத்துக் கொள்ளலாம். மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது. அதேபோல், Eicosapentaenoic அமிலத்தின் (EPA) அளவும் மீனில் அதிகம் காணப்படுகிறது. இந்த இரண்டு அமிலங்களும் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.

சில நச்சுப் பொருள்களால் அழிந்துபோகும் நம் உடலில் உள்ள நல்ல செல்களை மீண்டும் உருவாக்க EPA உதவிகரமாக இருக்கும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உண்ணத் தகுந்த உணவு மீன். எளிதில் செரிமானமாகும் மத்தி, சங்கரா மற்றும் வஞ்சரம் மீன் போன்ற பலவகைகள் இதில் உள்ளன. மீன் வகைளில் நண்டு, இறால் ஆகியனவும் அடங்கும்.

Fish Fry

Fish Fry
Photo by Saveurs Secretes from Pexels

கணவாய் போன்ற மீன்களைச் சாப்பிடும்போது சிலருக்கு கொழுப்புச் சத்து அதிகமாகும், எளிதில் செரிமானம் ஆகாமலும் இருக்கும். இப்படிப்பட்டவர்கள், மீனை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மீன் மிகச் சிறந்த உணவு. அவர்களுக்கு பால் சுரக்கும் தன்மையை அதிகரிக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மீன் முக்கிய பங்கு வகிக்கிறது” என்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com