மீனாட்சி மிஷன்:உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் | Meenakshi Mission: Exercising vigorously without knowing the personal health it can affect heart health!

Share

இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். N. கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.  இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

“கடந்த காலத்தில், போதுமான உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் உறுதிசெய்வது, புகைப்பிடிப்பது கைவிடுவது மற்றும் கொலஸ்ட்ரால், இரத்தஅழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற அம்சங்கள் பெரிதும் வலியுறுத்தப்பட்டன.  எனினும், தற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வது, போதுமான நேரம் உறங்குவது மற்றும் காற்று மற்றும் ஒளி மாசுவிற்கு வெளிப்படுவதை குறைப்பது ஆகியவற்றிற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பின்பற்றுவதும் சமஅளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை.” என்று அவர் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com