மீண்டும் மீண்டுமா..! .. தேர்தல் பரப்புரையில் அண்ணாமலை பேசும்போது தூங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு!

Share

ஈரோடு : ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக் கொண்டு இருந்த போதே அவர் அருகில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுந்த காட்சி பார்ப்போரை நகைப்புக்கு உள்ளாகியது. அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக வீரப்பசத்திரம், கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் , காந்திசிலை ஆகிய இடங்களில் பாஜக மாநில அண்ணாமலை வாக்கு சேகரித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் ஈரோடு தொகுதிக்கு செய்யப்பட்ட நலத் திட்டங்களையும் ஒன்றிய அரசின் திட்டங்களையும் பட்டியலிட்டு அண்ணாமலை பேசினார்.

அவரது அருகில் இருந்த வேட்பாளர் தென்னரசு அவ்வப்போது தனது முகத்தை துடைத்து கொண்டதை காண முடிந்தது. ஒரு கட்டத்தில் தூக்கத்தை கண் அசைத்துவிட்டு தென்னரசு, லேசான தடுமாற்றத்துடன் விழித்துக் கொண்டு மக்களை நோக்கி கும்பிட்ட காட்சி வெளியாகி உள்ளது.ஏற்கனவே இடைத் தேர்தலில் வாக்குக் கேட்டு எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த போது,அருகில் இருந்த வேட்பாளர் தென்னரசு தூங்கி விழுந்த காட்சி இணையத்தில் வைரலானது. இவரை வெற்றிப் பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பினால் மக்களின் பிரச்னையை பற்றி பேசாமல் அங்கும் தூங்கத் தான் செய்வார் என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.  

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com