இந்தியாவை பொறுத்தவரையில் அக்டோபர் மாத இறுதியில் இருந்து இதுவரையில் புதிய வேரியன்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 என பதிவாகி உள்ளது.
ஒமிக்ரான் போன்ற வேரியன்ட்கள் ஏற்படுத்தும் காய்ச்சல், இருமல், கடுமையான உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளையே JN.1 வேரியன்ட்டும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஒருவர் இதனை வேறுபடுத்தி அறிவது கடினமாக இருக்கிறது.
எனவே 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (Comorbidity), புற்றுநோய் நோயாளிகள் போல, எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது அவசியம்.
ஆகவே புதிய வேரியன்ட்டிற்கு எதிராகக் கூடுதல் டோஸ் தடுப்பூசி தேவையில்லை. நோய் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்.கே. அரோரா கூறியுள்ளார்.
கோவிட் தொற்றின் பாதிப்பால் உங்களது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன?… கமென்டில் சொல்லுங்கள்!