தினமும் என்னதான் சமைப்பது என்ற குழப்பமே ஒவ்வொருவருக்கும் தினமும் இருக்கும். அதுவும் டிஃபன் பாக்ஸில் கட்டிக் கொடுப்பதற்கு ஏற்றவாறு என்ன சமைப்பது என்பதை தேர்வு செய்வதே பெரிய சவால்தான். அப்படி இருக்கையில் பெரும்பாலானோர் தேர்வு செய்வது கட்டு சாதங்களையே. லெமன் சாதம், புளி சாதம் மிஞ்சி போனால் தேங்காய் சாதம் தவிற சுலபமாக என்ன செய்வது என்று குழம்பி இருப்பவர்களுக்கு இந்த மிளகு சீரக சாதம் ஒரு சிறந்த ஆப்ஷன். சில விநாடியிலேயே செய்து முடிக்க கூடிய இந்த சாதத்திற்கு வடகத்தை தொட்டுக்கொண்டால் கூட அவ்வளவு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- புழுங்கலரிசி சாதம் – 2 கப்
- பெருங்காயம் – சிறிதளவு
- மிளகு -3 டீஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – 1 கப்
- நெய் – 3 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – சிறிது
- உப்பு – தேவைக்கேற்றவாறு
- வெங்காயம்-1
- மிளகாய் – 2
- கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
- கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்க

செய்முறை:
முதலில் அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் தேங்காய்த் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். வாணலியில் நெய்யை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடவும். பின் சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறவும். கறிவேப்பிலைப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். மிளகு சீரக சாதம் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cumin, Food recipes, Pepper, Recipe