மில்லரின் மிரட்டலில் த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா!

Share

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

8வது டி20 உலககோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 ஆட்டத்தில் இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. பெர்த்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் சொதப்பினர்.

15 ரன்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் 9 ரன்களில் கே.எல்.ராகுலும் வெளியேறினர். அடுத்த வந்த விராட் கோலியும் நிகிடி பந்துவீச்சில் 12 ரன்களில் வெளியேறியதால் இந்திய அணி திணறி கொண்டிருந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன்களை தனி ஆளாக சூர்யகுமார் யாதவ் உயர்த்தினார்.

18.5 ஓவர் வரை போராடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 3சிக்சர், 6பவுண்டரிகள் என 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9விக்கெட்டை இழந்து 133 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், பார்னல் 3 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையும் படிங்க: இறுதி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கு காந்திருந்த பெரிய டிவிஸ்ட்: கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு ஜிம்பாப்வே தோல்வி!

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ருசோவை இரண்டாவது ஓவரிலே அர்ஷிதீப் சிங் விக்கெட்டை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து நிதனமாக ஆடிய மார்க்ரம் மற்றும் மில்லர் ஜோடி விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ரன்களை உயர்த்தினர்.

41 பந்துகளில் 51 ரன்கள் அடித்திருந்த மார்க்ரம் பாண்டிய பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் முதல் பந்தை டாட் பாலாக வைத்தார். பின்னர் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க ஸ்ரைக் ஆட டேவிட் மில்லர் வந்தார். மூன்றாவது மற்றும் நான்கவது பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விட்டு தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். சிறப்பாக விளையாடிய மில்லர் 46 பந்துகளில் 59 ரன்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

இதனையடுத்து 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி இலக்கை எட்டி5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடர்ந்து பீல்டிங்கில் தவறுகளால் இந்த தோல்வியை தழுவியது என்று தான் கூற வேண்டும். மார்க்ராம் கேட்சை விராட் கோலி தவறவிட்டார். மேலும் இரண்டு ரன் ஆவுட்டுகளை இந்திய அணி தவறவிட்டதால் தான் இந்திய அணிக்கு கடைசி வரை சென்று தோல்வியை தழுவியது. இந்த நிலையில் குரூப்-2 பிரிவில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 3 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com