
அரக்கோணம்: சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் அபிலேஷ் (28). இவர், கடந்த 9ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலைய 7வது பிளாட்பாரத்தில் நின்றிருந்த மின்சார ரயில் மேற்கூரை மீது ஏறி உயரழுத்த மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது, மின்சாரம் பாய்ந்து உடல் கருகி தூக்கி வீசப்பட்டார். விசாரணையில், அபிலேஷுக்கு, பெற்றோரும் இல்லை, வேலை எதுவும் இல்லாததால் திருணமும் நடக்கவில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகிலேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.