மிங் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு சீனா மிக விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியது ஏன்?

Share

சீனாவில் தூக்கிலிடப்பட்ட மாஃபியா குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் – முழு பின்னணி

பட மூலாதாரம், CCTV

படக்குறிப்பு, மிங் குடும்பத்தைச் சேர்ந்த டஜன் கணக்கானோருக்கு செப்டம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது

கடந்த செப்டம்பரில் மியான்மரின் வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் 11 உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு சீனா விரைவாக மரண தண்டனை நிறைவேற்றியதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

மனித உரிமை அமைப்புகளின் கூற்றுப்படி, உலகின் வேறு எந்தப் பகுதியையும்விட சீனா அதிகமான மக்களுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அதன் சரியான எண்ணிக்கை அரசாங்க ரகசியமாக உள்ளது. ஊழல் குற்றங்களுக்காக அதிகாரிகளுக்கு அடிக்கடி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட மிங் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அதைவிட மிகவும் தீவிரமானவை.

ஷான், மியான்மரில் வறுமையிலுள்ள ஒரு மாகாணம். அங்கு, தொலைதூர எல்லையில் அமைந்துள்ள லௌக்கைங் நகரத்தில், கடந்த 2009ஆம் ஆண்டு முதல், மிங், பௌ, வெய், லியு ஆகிய வம்சாவளிகளைச் சேர்ந்த குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

நான்கு குடும்பங்கள்

கடந்த 1980களில் இருந்து பல ஆண்டுகளுக்கு, எம்.என்.டி.ஏ.ஏ என்றழைக்கப்படும் ஆயுதமேந்திய இனக்குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் லௌக்கைங் மற்றும் அருகிலுள்ள பகுதிகள் இருந்தன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com