மாற்றுத்திறனாளி ஊழியரை கேலி செய்த எலான் மஸ்க்… மன்னிப்பு கேட்டு ட்வீட்! |Elon Musk who made fun of a disabled employee… tweeted an apology!

Share

எனவே எலானை டேக் செய்து ட்விட்டரில் தான் வேலையில் இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். கேள்விக்குப் பதிலளிக்காமல் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார், எலான். பொதுத் தளத்தில் அதைக் கூறலாமா என கேட்டு உறுதி பெற்று, தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார். 

அதற்குச் சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி அவமானப்படுத்தியவர், அவரின் இயலாமையைச் சந்தேகித்து, பெரிய தொகையை தன்னிடமிருந்து பெறத் தான் இப்படிச் செய்கிறார். அதோடு இவர் உண்மையாக எந்த வேலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தன்னுடைய பணியின் தன்மை தன்னுடைய குறைபாடு (தசைநார் தேய்வு) அனைத்தையும் விளக்கி ட்விட்டரில் பதிவிட்டார் ஹல்லி. சமூக வலைத்தளத்தில் இருந்த பலரும் எலானுக்கு எதிராக ட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று எலான் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். அதில், `எது உண்மை என்பதை அறிந்து கொள்ள நான் ஹல்லிக்கு வீடியோ கால் செய்தேன். இது ஒரு நீண்ட கதை. ட்வீட் மூலம் தொடர்பு கொள்வதை விட மக்களுடன் பேசுவது நல்லது.

ஹல்லியின் நிலைமையை நான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். அவர் ட்விட்டரில் தொடர்ந்து இருப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com