மாரடைப்பு ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? | Visual Story

Share

இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவதையே நாம் மாரடைப்பு என்கிறோம்.

மோசமான உணவுப்பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்வியலே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக்காரணம்.

தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கொழுப்புகள் கரைவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.

உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தூக்கம் அத்தியாவசியமானது என்பதால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் தூங்க வேண்டும்.

45 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் நிலையில் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று விட வேண்டும்.

உலக அளவில் உயிரிழப்புகளுக்கான காரணிகளில் முதன்மையானது மாரடைப்பு என்பதால் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com