மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் ஷர்வானி, மேகன் | Sharwani, Megan reach state ranking table tennis quarterfinals

Share

சென்னை: ​மாநில ரேங்​கிங் டேபிள் டென்​னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்​விளை​யாட்டு அரங்​கில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று யு-19 மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் மயி​லாப்​பூர் கிளப்பை சேர்ந்த என்​.ஷர்​வானி 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்​கில் எஸ்​.வர்​ஷினியை (பிடிடிஏ) வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தார். ஹன்​சினி (சென்​னை), நந்​தினி (எம்​விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்​சீவர்​ஸ்), புவனிதா (மதுரை), வர்​னிகா (ஈரோடு) ஆகியோ​ரும் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

யு-19 ஆடவர் பிரி​வில் சென்னை அச்​சீவர்ஸ் கிளப்பை சேர்ந்த எஸ்​.மேகன் 11-7, 12-10, 11-8 என்ற செட் கணக்​கில் ஆகாஷ் ராஜவேலுவை (சிடிடிஎஃப்) வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். பால​முரு​கன் (ஐடிடிசி), நிகில் மேனன் (எம்​எஸ்​டி), அக் ஷய் பூஷன் (எஸ்கே அகாட​மி), உமேஷ் (ஆர்​டிடிஹெச்​பிசி), விஷ்ரூத் ராமகிருஷ்ணன் (எம்​எஸ்​டி), பி.பி.அபினந்த் (சென்னை அச்​சீவர்​ஸ்), ஸ்ரீராம் (சென்னை அச்​சீவர்​ஸ்) ஆகியோ​ரும் கால் இறுதி சுற்​றுக்​கு முன்​னேறினர்​.

மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் சேலத்தில் இன்று தொடக்கம்

97-வது மாநில சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப் சேலத்​தில் உள்ள பெரி​யார் பல்​கலைக்​கழகத்​தில் இன்று (19-ம் தேதி) தொடங்​கு​கிறது.

இந்த போட்​டியை தமிழ்​நாடு தடகள சங்​கம் மற்​றும் சேலம் மாவட்ட தடகள சங்​கம் இணைந்து நடத்​துகின்​றன. இரு நாட்​கள் நடை​பெறும் இந்த போட்​டி​யில் 1,200 வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர். ஆடவர், மகளிர் பிரி​வில் 50 போட்​டிகள் நடை​பெறுகின்​றன. இந்த போட்​டி​யானது வரும் ஆகஸ்ட் 20 முதல் 24 வரை சென்னை ஜவஹர்​லால் நேரு விளை​யாட்​டரங்​கில் நடை​பெற உள்ள 64-வது தேசிய அளவி​லான சீனியர் தடகள சாம்​பியன்​ஷிப்​புக்​கான தேர்​வுப் போட்​டி​யாக அமைந்​துள்​ளது.

சேலத்​தில் இன்று தொடங்​கும் போட்​டி​யில் ராகுல் குமார் (100 மீட்​டர் ஓட்​டம்), தமிழரசு (100 மீட்​டர் ஓட்​டம்), கவுதம் (போல் வால்ட்) உள்​ளிட்ட முன்​னணி வீரர்​களும், பரணிகா இளங்​கோவன் (போல் வால்ட்), வித்யா ராம்​ராஜ் (100 மீட்​டர் தடை​தாண்​டும் ஓட்​டம்), பிர​திக் ஷா யமுனா (நீளம் தாண்​டு​தல்) உள்​ளிட்ட முன்​னணி வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர்.இத்​தகவலை தமிழ்​நாடு தடகள சங்க செய​லா​ளர்​ லதா தெரிவித்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com