மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

Share

மாநில ஆளுநர்களை சட்டமன்ற பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டுமா? ஜோசப் குரியன் ஆணையம் சொல்வது என்ன?

பட மூலாதாரம், rajbhavan_tn

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்தியாவில் மாநில ஆளுநர்களை நியமிக்கும்போது, மாநில சட்டமன்றங்களால் பரிந்துரைக்கப்படும் மூன்று பேரில் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்கிறது தமிழ்நாடு அரசால் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம். மேலும், ஆளுநர்களுக்கு ஒரே ஒருமுறை மட்டுமே பதவிக்காலம் வழங்க வேண்டுமென்றும் அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளைப் பற்றி ஆராய்ந்து, தேவையான பரிந்துரைகளை அளிக்க கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர். இந்த அறிக்கையின் முதல் பகுதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணையம், முதல்கட்டமாக அதிகாரங்களைப் பரவலாக்குதல் மற்றும் மாநில சுயாட்சி, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவது, ஆளுநர்கள், மொழிக் கொள்கை, தொகுதி சீரமைப்பு, தேர்தல்கள், ஜிஎஸ்டி சீர்திருத்தம் உள்ளிட்ட பத்து விவகாரங்களை எடுத்துக்கொண்டு அது தொடர்பான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது.

தி.மு.க. தலைமையிலான தற்போதைய தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான உறவு மிகச் சிக்கலானதாக இருக்கும் நிலையில், ஆளுநர்கள் தொடர்பாக இந்த அறிக்கை முன்வைத்திருக்கும் பரிந்துரைகள் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன. ஆளுநர்களின் நியமனம், அவர்களது அதிகார வரம்பு ஆகியவை உள்படப் பல்வேறு அம்சங்கள் தொடர்பான பரிந்துரைகள் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com