அடுத்த நாளே மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் அவரின் அம்மா. லைலாவுக்கு அதுவரை எந்த மருந்து ஒவ்வாமையும் இருந்ததில்லை என்பதால் எந்த டெஸ்ட்டும் எடுக்கச் சொல்லவில்லை. ஆனால் அன்றைய தினமே அவர் தன் வீட்டுக் குளியலறையில் மயங்கி விழுந்திருக்கிறார். உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் குடும்பத்தார். அங்கே அவருக்கு மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டிருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து எமர்ஜென்சியாக ஆபரேஷனும் செய்யப்பட்டிருக்கிறது. அதையும் மீறி டிசம்பர் 13-ம் தேதி லைலா உயிரிழந்திருக்கிறார்.

லைலா ஒவ்வோர் அரைமணி நேரத்துக்கொரு முறையும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்ததாகவும் மருத்துவர் அது வயிற்றில் ஏற்பட்ட இன்ஃபெக்ஷன் காரணமாக இருக்கும் என சொல்லி மாத்திரைகள் கொடுத்ததாகவும் லைலாவின் உறவினர் ஜென்னா தெரிவித்திருக்கிறார்.
மாதவிடாய் கால வலியால் அவதிப்பட்ட லைலா, அவரின் தோழிகள் சொன்னதைக் கேட்டு கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தியதன் விளைவுதான் அவருக்கு ஏற்பட்ட தலைவலி, வாந்திக்கு காரணம் என அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பெரிய பாதிப்பில்லை என லைலாவை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். வீட்டுக்குப் போனதும் லைலா வலியில் அலறித் துடித்திருக்கிறார். அதன் பிறகுதான் குளியலறையில் மயங்கி விழுந்திருக்கிறார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அதையடுத்து லைலாவின் உடல் உறுப்புகளை தானமளிக்க முன்வந்துள்ளனர் அவரின் குடும்பத்தார்.