மாதவிடாய் பொருள்கள் இலவசம்… ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம்! I Scotland first in world to make period products free

Share

மாதவிடாய் பொருள்களை இலவசமாக விநியோகிக்க பொது இடங்களில் அரசு, கடைகள் திறக்க வேண்டும். அப்படி பொது இடங்களில் இவற்றை வாங்குவதில் உடன்பாடில்லாதவர்கள் அதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி ஆர்டர் செய்யும்போது அதற்கான டெலிவரி செலவுகளை மட்டும் செலுத்த வேண்டும். இதுபற்றி பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் நிக்கோலா ஸ்டர்கன், “இந்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது உபயோகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரே ஸ்காட்லாந்தில் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது தான் உலகில் முதல் முறையாக ஒரு நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு அது அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில நாடுகளிலும் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அங்கு சட்டம் இயற்றப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com