மாண்டஸ் புயல்: “எதுவந்தாலும் மக்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது!” – ஸ்டாலின் | Tamilnadu CM stalin visits state control room ahead of mandous cyclone

Share

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் `மாண்டஸ்’ புயல் இன்று நள்ளிரவு வேளையில், புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர், உட்பட மொத்தம் 14 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் - கடற்கரையில் பொதுமக்கள்

மாண்டஸ் புயல் – கடற்கரையில் பொதுமக்கள்

தற்போது சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் சற்றுமுன்பு ஆய்வு செய்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அதிகாரி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எவ்வளவு மழை வந்தாலும், புயல் வந்தாலும் அதிலிருந்து மக்களைக் காப்பதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது. மாவட்டங்களைப் பொறுத்தவரை சில முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். சில முகாம்களில் தங்கவைக்க வேண்டிய சூழ்நிலை வரவில்லை. இருந்தாலும் மக்களுக்கு உரிய எச்சரிக்கைகளை வழங்கி வருகிறார்கள். அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com