மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

Share

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA FB

(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்னைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு விலக்கமளிக்கப்படும் எனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை அரசங்கம் என்ற ரீதியில் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடாளுமன்றத்தில் சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தே சகல தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பிரச்னைக்கு தீர்வு காண எவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வராததை தொடர்ந்து, புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com