மல்யுத்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாயிகள் – கங்கைக் கரையில் நடந்த கடைசி நேர உணர்ச்சிமிகு போராட்டம்

Share

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

பட மூலாதாரம், ANI

வாழ்நாள் கனவாக ஒலிம்பிக்கில் வென்றெடுத்த பதக்கங்களை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை ஆற்றில் வீசியெறியச் சென்ற இடத்தில் உணர்ச்சிமிகு காட்சிகள் அரங்கேறியுள்ளன. கடைசி நேரத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். கங்கைக் கரையில் பதக்கங்களுடன் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் கண்ட பொதுமக்கள் வேதனையடைந்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் ஏப்ரல் 23-ம் தேதியன்று போராட்டத்தை மீண்டும் தொடங்கினார்கள். 18 வயதுக்கு உட்பட்ட ஒருவர் உட்பட பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதி வழியில் நீடித்த இந்த போராட்டத்தின், கடந்த 28-ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவன்று மாறிப் போனது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக புறப்பட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

பிடிஐ செய்தி முகமை தகவல்படி, ஜந்தர் மந்தரில் இருந்த 109 போராட்டக்காரர்கள் உட்பட டெல்லி முழுவதும் 700 பேர் டெல்லி காவல்துறை கைது செய்தது. பிறகு இரவு நீண்டநேரம் கழித்து வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், சங்கீதா போகாட் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com