மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் – News18 Tamil

Share

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 57 கிலோ எடைப் பிரிவில் ஆடவருக்கான மல்யுத்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா நைஜீரியா வீரர் எபி கெவெனிமோ-வை எதிர்கொண்டார். இதில் ரவிக்குமார் தஹியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதன் மூலம் 10-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோல் ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தான் வீரர் முகமது ஷெரீஃபை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல், மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்றார். இலங்கையின் சாமோத்யா கேஷானி உடன் மோதிய வினேஷ் போகத், ஆட்டத்தின் தொடக்கம் முதலே அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் அவர் எளிதாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதனிடையே, பாரா டேபிள் டென்னிஸ் பிரிவில் மகளிருக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா படேல், நைஜீரியாவின் கிறிஸ்டியானாவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில், மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் பவினா படேல் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஸ் முகுந்த் சப்ளே நூலிழையில் தங்கப் பதக்க வாய்ப்பை தவறவிட்டார். இப்போட்டியில் முதலில் இரண்டாயிரம் மீட்டர் வரை பின்தங்கிய இருந்த அவினாஷ், கடைசி ஆயிரம் மீட்டர் தூரத்தில் வேகத்தை கூட்டினார். இருந்த போதும், கடைசி நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்ட கென்ய வீரர் ஆபிரஹாம், பந்தய இலக்கை 8 நிமிடம் 11 புள்ளி 15 வினாடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார். அவினாஸ் 8 நிமிடம் 11 புள்ளி 20 விநாடிகளில் இலக்கை கடந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தையே வசப்படுத்தினார்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்தியா.. தோல்வியே சந்திக்காத குகேஷ்

பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா 59 தங்கம் உட்பட மொத்தம் 155 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதையடுத்து, போட்டியை நடத்தும் இங்கிலாந்து 50 தங்கத்துடன் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது. கனடா 22 மற்றும் நியூசிலாந்து 17 தங்கத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை பதக்கப் பட்டியலில், 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் உட்பட மொத்தம் 40 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com