கேரளத்தில் அதிகரிக்கும் கோவிட்!
கேரள மாநிலத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 111 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பாதிப்பு பற்றிய ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், “பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரே இடத்தில் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்படும் (Cluster) நிலை மாநிலத்தில் எங்கும் இல்லை.
ஒவ்வொரு நாளும் கோவிட் பாதித்தவர்கள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளும் எப்போதும் தயார்நிலையில் இருக்க அவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்குச் செல்லும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.