மன அழுத்தம் உள்ளவர்களுக்கு அறிவாற்றல் குறைபாடு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கும். அவர்களுக்கு நினைவாற்றல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, கவனம் செலுத்துவது மற்றும் அன்றாட வாழ்க்கையில் எடுக்கும் சிறிய முடிவில் தடுமாற்றம் எனப் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிவாற்றல் குறைபாடு அபாயத்தில் உள்ள வயதானவர்களுக்கு இடையே மன அழுத்தத்தைக் குறைக்க ஸ்கிரினிங் திட்டங்கள் மற்றும் டார்கெட் பயிற்சிகளை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் ஆய்வுகளை பரிந்துரைத்தனர். முந்தைய ஆராய்ச்சிகளில் மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுக்கு கவலை, மனச்சோர்வு, தலைவலி, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், தூக்கப் பிரச்னைகள் மற்றும் மனநலப் பிரச்னைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தற்போது அதனுடன் அறிவாற்றல் பாதிப்பு பிரச்னையும் இணைந்துள்ளது.