மனைவியை திருப்திசெய்ய இப்படிப் பண்ணலாமா? – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 115

Share

தாம்பத்திய உறவைப் பொறுத்தவரை, ஆணோ, பெண்ணோ மருத்துவர்கள் சொல்வதைவிட குடும்பத்தினரும் நண்பர்களும் சொல்வதைத்தான் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையாக இருந்துவிட்டால், சம்பந்தப்பட்ட நபரின் வாழ்க்கைத்துணை ரொம்பவே கஷ்டப்படுவார்கள். இது போன்றதொரு கேஸ் ஹிஸ்டரியைத்தான் இந்த முறை நம்முடன் பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

Sexologist Kamaraj

“ `செக்ஸ்ல நான் ரொம்ப வீக்கா இருக்கேன் டாக்டர்’னு என்கிட்ட சிகிச்சைக்கு வந்தார் ஒருத்தர். டெஸ்ட் செய்து பார்த்தா நார்மலா இருந்தார். விசாரிச்சதுல தினமும் செக்ஸ் வெச்சிருக்கிறதா வேற சொன்னார். சரி வேறு என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி செய்றதுக்காக அவரோட மனைவியை அழைச்சிட்டு வரச் சொன்னேன். அவரும் வந்தார். `இவர் தினமும் செக்ஸ் பண்ணிட்டுத்தான் இருக்கார். உண்மையைச் சொல்லணும்னா இவர் பண்ற தொல்லையைத்தான் தாங்க முடியல டாக்டர்’ என்று வேதனைப்பட்டார். `என்ன சார் உங்க வொய்ஃப் இப்படி சொல்றாங்களே…’ என்று அந்த ஆண் பக்கமாகத் திரும்பினேன்.

`இல்ல டாக்டர். ஒருநாளைக்கு நாலைஞ்சு முறை செக்ஸ் பண்ணா தான் லேடீஸை திருப்தி செய்ய முடியும்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. ஆனா, என்னால ஒரு நாளைக்கு மூணு தடவைக்கு மேல செக்ஸ் பண்ணவே முடியல. நான் ரொம்ப வீக்கா இருக்கேன்போல…’ என்றார் நிஜமான வருத்தத்தோடு… எப்படிப்பட்ட மூடநம்பிக்கையை நம்பிக்கிட்டு இருந்திருக்கார் பாருங்க. செக்ஸ் நிறைய செஞ்சா உடம்பு வீக் ஆயிடும்’, `மெனோபாஸுக்குப் பிறகு செக்ஸ் வெச்சுக்கிட்டா உடம்பு கெட்டுப் போயிடும்’, ‘நிறைய தடவை செக்ஸ் பண்ணாதான் மனைவி நம்மளை விட்டுட்டுப் போக மாட்டாள்…’ – இப்படி செக்ஸ் தொடர்பா பல மூடநம்பிக்கைகள் நம்மோட சமூகத்துல இருக்கு…

Sex education

அந்த ஆணுக்குத் தேவை செக்ஸ் எஜுகேஷன்தான். இத்தனை முறை செக்ஸ் பண்ணாதான் ஆண் மகன் அப்படிங்கிறதுல எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்ல. உங்க ரெண்டு பேர் விருப்பத்தைப் பொறுத்து நடந்துக்கோங்க என்று அட்வைஸ் செஞ்சு அனுப்பினேன்” என்றார் டாக்டர் காமராஜ்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com