மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: சீமான் பேட்டி

Share

சென்னை: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நேற்று  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது, அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மனிதனை, மனிதன் சுமப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.  இலங்கை தமிழர்களுக்கு உதவ நாம் தமிழர் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை திரட்டிக் கொண்டு இருக்கிறோம். அதை முறைப்படி கொண்டுபோய் சேர்ப்போம். தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது இலங்கை தமிழர்களுக்கு போய் சேரும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com